பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது எப்படி?
டெல்லி:
கடந்த மே மாதம் 23ம் தேதி அந்த அதிசயம் நடந்தது. இந்தியா மீது கார்கில் போரைத் திணித்த, பாகிஸ்தானில் ஒருவழியாய் நுழைந்த ஜனநாயக தூக்கிஎறிந்துவிட்டு ஆட்சியைப் பிடித்த அந் நாட்டில் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபை பேச்சுவார்த்தை இந்தியா வருமாறு அழைத்தார் பிரதமர் வாஜ்பாய்.
அடுத்து ஒரு அதிரடி செய்தார். இந்தியாவில் ராணுவத் தளபதியாக போய் நின்றால் மரியாதை கிடைக்காது எனக் கருதிய முஷாரப் ஜனாதிபதியை வீட்டுக்குஅனுப்பிவிட்டு தன்னையே ஜனாதிபதியாகவும் அறிவித்துக் கொண்டார்.
பர்வேஸை பேச்சுவார்த்தை அழைத்த அதே தினத்தன்று காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தைதிரும்பப் பெற்றது இந்தியா. பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றாலும் அடிதடிக்கும் தயார் என்பதைத் தான் பாகிஸ்தானுக்கு இந்தியா மறைமுகமாகஉணர்த்தியது.
பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதை ஓடி வந்து வரவேற்றார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபிஅன்னான்.
25ம் தேதி இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அழைப்பு முஷாரபுக்குப் போய்ச் சேர்ந்தது. காஷ்மீரில் இயங்கும் லக்ஷர்-ஏ-தைபா உள்ளிட்டதீவிரவாத அமைப்புகள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி அமைப்புகளும் பேச்சுவார்த்தையை எதிர்த்தன.இதையடுத்து ஜிகாதி தீவிரவாதிகளை அழைத்துப் பேசினார் முஷாரப்.
மே 28ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைமையை தெளிவுபடுத்தினார் வாஜ்பாய். காஷ்மீர்குறித்து பேசத் தயார். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பகுதிகள் குறித்து மட்டுமே பேசுவோம் என்றார் ஜஸ்வந்த் சிங்.
எதிர்பார்த்ததைப் போலவே பாகிஸ்தானில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இரு தரப்பிலும் ஒரு முடிவுக்கு வந்தனர். பேச்சுவார்த்தை துவங்கும்வரை என்ன பேசப் போகிறோம் என்பது குறித்து இரு தரப்பிலும் வெளியில் ஏதும் சொல்ல வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமில்லாமல் முடிவுசெய்யப்பட்டது.
ஜூன் 3ம் தேதி பாகிஸ்தான் தனது நல்லெண்ணத்தைத் தெரிவிக்க 158 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது. 8ம் தேதி தனது ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துதனது இந்தியப் பயணம் குறித்து விளக்கிய முஷாரப் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். முஷாரபுக்கு ராணுவ அதிகாரிகள் முழு ஆதரவு தெரிவித்தனர்.
காஷ்மீரில் உள்ள பல்வேறு சுதந்திரம் கோரும் அமைப்புகளின் கூட்டமைப்பான ஹூரியத் அவசர கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.
வாஜ்பாய்-முஷாரப் பேச்சுவார்த்தையை டெல்லியைவிட்டு வேறு இடத்தில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு ஆக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஜூன் 16ம் தேதி தனது நிலையை வெளிப்படுத்தினார் முஷாரப். காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் இந்த துணைக் கண்டத்தில் அமைதியை நிலை நிறுத்தஒரே வழி என்றார். அதே நாளில் இந்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தானுக்கு பதில் தந்தது. காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. அதுகுறித்து பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று தெளிவுபடுத்தியது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications