பள்ளிவாசலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகள்: ராணுவம் சுட்டு ஒருவன் பலி
காஷ்மீர்:
வட காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் குன்சேர் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலில் மறைந்துள்ளதீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இங்குள்ள அலி முகம்மத் ஷா பள்ளிவாசலில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 2 முதல் 3 தீவிரவாதிகள்கொண்ட குழு புகுந்தது.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர்பள்ளிவாசலை சுற்றி வளைத்தனர். உடனடியாக சரணடையுமாறு தீவிரவாதிகளுக்கு மைக் மூலம் எச்சரிக்கைவிடுத்தனர்.
ஆனால், தீவிரவாதிகள் வெளியே வர மறுத்தனர். வழிபாட்டுத் தலம் என்பதால் பாதுகாப்புப் படையினர் உள்ளேநுழையவில்லை. சரணடையுமாறு இஸ்லாமிய பெரியவர்கள் மூலமாகவும் பாதுகாப்புப் படையினர் கோரிக்கைவிடுத்தனர்.
சுமார் 5 மணி நேரம் கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை. இந் நிலையில் காலை 10.15 மணிக்குபாதுகாப்புப் படையினர் மீது உள்ளே இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர். வழிபாட்டுத் தலத்துக்கு சேதம் ஏற்படாதவண்ணம்பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் இருந்தது.
பள்ளிவாசலில் இருந்து தப்ப முயன்ற ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இன்னொருவன் தப்பியோடமுயன்றபோது குண்டு பாயந்து காயமடைந்தான். ஆனால், திரும்பி அவன் பள்ளிவாசலுக்குள் ஓடிவிட்டான்.
இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். உள்ளே இருக்கும் மேலும் ஒரு தீவிரவாதியுடன் துப்பாக்கிச் சண்டைதொடர்ந்து நடந்து வருகிறது.
பள்ளிவாசல்களில் தீவிரவாதிகள் தஞ்சம் புக அனுமதிக்க முடியாது என கடந்த மாதம் தான் மத்திய அரசுஅறிவித்தது. இதற்கு முன் காஷ்மீரில் 3 முறை பள்ளிவாசல்களில் தீவிரவாதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதில் முதல்முறை தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால் பள்ளிவாசலுக்கும் வரும் எனக் கருதிய ராணுவம்தீவிரவாதிகளை தப்பியோட அனுமதித்தது.
இரண்டாவது முறை பள்ளிவாசலில் தஞ்சமடைந்த 8 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.
மூன்றாவது முறை தஞ்சமடைந்த தீவிரவாதிகளை ராணுவம் தாக்கியது. இதில் ஒருவன் கொல்லப்பட்டான்.
இப்போது நான்காவது முறையாக தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், பள்ளிவாசலை நான்கு பக்கமும் சுற்றிவளைத்துள்ள ராணுவம் ஒருவனை சுட்டுக் கொன்றுள்ளது. தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications