ரமேஷ் மனைவியை கற்பழிப்பதாக போலீஸ் மிரட்டியதா?: சி.பி.ஐ. விசாரிக்க திமுக கோரிக்கை
சென்னை:
மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ரமேஷ் குடும்பத்துடன் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என திமுக கோரியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துவிட்டன. சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன்தான் மனித உரிமைகளை முன்னின்று நடத்தி வருகிறார். போலீசாரின் மிரட்டல்கள், விசாரணை என்ற பெயரில்போலீசாரின் காட்டுமிராண்டித்தனம் ஆகியவை தான் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளகாரணமானது.
போலீசாரின் கொடுமைக்கு 11 மாதக் குழந்தையும் தப்பவில்லை. ரமேஷ் அந்தக் குழந்தையையும் கொன்றுவிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேவலப்படுத்துதல், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல், பொய் வழக்குகள் போடுதல் என போலீசாரின் மனிதஉரிமை மீறல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தனது வீட்டை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக தனது தற்கொலைக் கடிதத்திலேயே ரமேஷ்குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவில் ரமேஷின் வீட்டுக் கதவைத் தட்டி அவரை எழுப்பிய போலீசார் ஒரு பேப்பரில்கையெழுத்து போடுமாறு சொல்லி மிரட்டியுள்ளனர்.
அந்த பேப்பரில் ஸ்டாலின் ஊழல் செய்ததாக போலீசாரே எழுதி வைத்துக் கொண்டு ரமேஷை கையெழுத்துப்போடச் சொல்லி மிரட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் போதைப் பொருளை வைத்துவிட்டு ரமேஷைபோதைப் பொருள் தடுப்பு சட்டப்படி கைது செய்து துன்புறுத்தவும் போலீஸ் திட்டமிட்டிருந்தது. இதை தனதுதற்கொலைக் கடிதத்திலேயே ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
மனரீதியில் அவரது குடும்பத்தை ஜெயலலிதா அரசு பாடாய்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண ஆசாமியான என்னைவிட்டுவிடுங்கள் எனக் கோரி ஜெயலலிதாவுக்கே ரமேஷ் கோரிக்கை விடுத்தும் பார்த்துள்ளார். பொய் கேஸ்களைசந்தித்து கேவலப்படுவதைவிட சாவதே மேல் என ரமேஷ் கடிதத்தில் கூறியுள்ளார்.
எனவே, போலீசாரின் அத்துமீறல்கள், மிரட்டல்கள், நடத்தைகள் தான் ரமேஷின் தற்கெலைக்குக் காரணம் என்பதுதெளிவாகிறது. ஒரு மரியாதையான குடும்பத்தின் மானத்துடன் போலீஸ் விளையாடியுள்ளது.
மேலும் ஸ்டாலின் மீது அரசு போட்டுள்ள ஊழல் புகாரில் ஸ்டாலினுக்கு எதிராக சாட்சி சொல்லாவிட்டால், உனதுமனைவி காஞ்சனாவை கற்பழித்து அவரது நிர்வாண போட்டோவை பத்திரிக்கைகளுக்கு வெளியிடுவோம் எனவும்போலீஸ் கூறியுள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தனக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியின் மருமகன் மீதே பொய் வழக்கு போட்டவர் தான் ஜெயலலிதா.ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்கதை எழுதிய எம்.ஜி.ஆரின் டிரைவரும் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க போலீஸை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. இதற்கு சென்னைபோலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் முழுமையாக உதவி வருகிறார்.
போலீசாரின் அடாவடித்தனம், குடும்பத்தை சீரழித்த முரட்டுத்தனம் ஆகியவை குறித்து மனத உரிமைக் கமிஷன்விசாரிக்க வேண்டும்.
பொய் கேஸ் போடுவதற்காக போதைப் பொருள்களை போலீசார் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பதுகுறித்தும் விசாரிக்க வேண்டும். போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கும் போலீசுக்கும் உள்ள தொடர்புகள்குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் திமுக எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மனித உரிமைக் கமிஷன் நீதிபதி சர்மா, இது குறித்து விசாரித்துபதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு 4 வார கால கெடுவும் விதித்துள்ளார் என திமுக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications