பூலன்தேவி கொலையில் திடீர் திருப்பம்
டெல்லி:
பூலன்தேவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்தவர் எப்படி பூலன்தேவியை டெல்லியில் வைத்து சுட்டுக் கொன்றார் என்று புதிய குழப்பம்ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்தது இந்த ஷேர்சிங் தானா அல்லது வேறு நபரா என்பது குறித்து முழு விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தராஞ்சல் போலீஸ் டி.ஜி.டி. சரண் கூறுகையில், ஒரு சுங்கவரி வழக்கு மோசடி தொடர்பாக ராணா கடந்த 25ம்தேதி (பூலன் கொல்லப்பட்ட நாள்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் தான் அவர்ஜாமீனில் விடுதலையானார் என்றார்.
ராணா செய்த திட்டமிட்ட குழப்பமா?
கொலை வழக்கில் இருந்து தப்புவதற்காக 25ம் தேதியன்று, தான் சிறையில் இருந்தது போன்ற போலியானசாட்சியத்தை உருவாக்குவதற்காக ராணாவே ஏதாவது குளறுபடி செய்திருக்கலாம் என்றும் போலீசார்கருதுகின்றனர்.
போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து கொலை நடந்த தினத்தன்று சிறையில் இருந்ததைப் போலஆவணங்களை ராணா உருவாக்கியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
மேலும் ஒரு குழப்பம்:
இது தவிர, ராணாவின் குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது என்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் மேலும் ஒருபுதிய விவகாரமும் வெளியாகியுள்ளது.
இந்த சுங்கவரி மோசடி தொடர்பாக ராணா ஏற்கனவே ஒருமுறை கைதாகியுள்ளார். பின்னர், ஜாமீனில்விடுவிக்கப்பட்டார். இந் நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி ராணாவை உடனே கைது செய்யுமாறும், அவரதுஜாமீன் மனுவை ரத்து செய்யுமாறும் கோரி அவரது தந்தை ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், எனது மகனின் செயல்பாடுகள் சரியில்லை. எனவே, அவனை ஜாமீனில் வெளியில் விட்டுவைக்கவேண்டாம் என கூறியிருந்தார்.
இதையடுத்துத் தான் ராணாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஆனால், அடுத்த நாள் ராணாவின தம்பி நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டார். அதில் தனது சகோதரரை உடனேவிடுவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதைத் தொடர்ந்து தான் ராணா மீண்டும் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
பூலன் தேவியின் கொலை வழக்கில் போலீஸ் கையில் சிக்கினால், எளிதில் தப்புவதற்காக ஏற்கனவே ராணாதிட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்ததில் நீதிமன்ற, சிறைத்துறை அதிகாரிகளுக்கும்தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த 27ம் தேதி கைது செய்யப்பட்ட ராணா, நான் தான் பூலன்தேவியைக் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், கொலை நடந்த நாளன்று ஹரித்வார் சிறையில் இருந்தது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.
இதனால், பூலன்தேவியை ராணா தான் கொன்றாரா அல்லது இதில் வேறு பெரிய நபருக்குத் தொடர்புள்ளதா,அவரைக் காப்பாற்றுவதற்காக கொலையை நான் தான் செய்தேன் என்று ராணா கூறுகிறாரா என்று விசாரணை புதியகோணத்தை அடைந்துள்ளது.
கணவர் மீது குற்றச்சாட்டு:
இந் நிலையில் பூலன்தேவியின் கொலையில் அவரது கணவர் உமேத் சிங்குக்குத் தொடர்பு உள்ளது என பூலனின்சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். உமேத் சிங் மீது ஏற்கனவே பலரும் சந்தேகம் அடைந்துள்ளனர்.
ராணா கைது செய்யப்பட்டதால், இந்த வழக்கு முடிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால், இப்போது தான்உண்மையான விசாரணையே ஆரம்பித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications