ஆசிய கோப்பை டெஸ்ட்டில் இந்தியா பங்கேற்காது
டெல்லி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் படி கனடாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கவில்லை. பாகிஸ்தானில்சுற்றுப்பயணம் செய்ய இந்தியா முன்பு முடிவு செய்திருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 29ம் தேதி முல்டானில் நடைபெறவிருக்கும் ஆசிய டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவிளையாடுமா என்ற கேள்வி பல நாட்களாக நிலவி வந்தது.
சில தினங்களுக்கு முன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி, பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.இந்தக் கடிதத்தில், வரும் 29ம் தேதி முல்டானில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில்இந்தியா பங்கேற்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.
உமாபாரதியின் கடிதம் குறித்து, உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்ஆகியோருடன் பிரதமர் வாஜ்பாய் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின், ஆசிய கோப்பை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது என்ற முடிவுசெய்யப்பட்டது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில், கடந்த முறை கோப்பையை வென்ற பாகிஸ்தானும்,புதிதாக டெஸ்ட் போட்டிகள் விளையாட தொடங்கியுள்ள வங்க தேசமும் பங்கேற்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications