கோலார் :கட்டிட விபத்தில் 7 தமிழக தொழிலாளிகள் பலி

Subscribe to Oneindia Tamil

கோலார்:

கர்நாடகா மாநிலம் கோலார் அருகே கட்டுமானப் பணியின் போது மின்சார கோபுரம்சரிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் 7 பேர் உயிரிழந்தனர்.

ஒரிசா மாநிலத்திலிருந்து சென்னைக்கு கர்நாடகா மாநிலம் கோலார் வழியாக 2,000மெகவாட் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் காலம்சென்ற ரங்கராஜன்குமாரமங்லம் மத்திய மின்துறை அமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா மாநிலம் கோலார் மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் 100 அடி மின் கோபுரங்கள் அமைக்கும் பணியும், மின் கோபுரரங்கள்இடையே மின் கம்பிகளை இணைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோலார் அருகே உள் கோடிசொன்னூரில் வியாழக்கிழமை காலை 100 அடி உயர மின்கோபுரம் அமைக்கும் பணியில் தமிழகத்தின் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரியைச்சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த மின் கோபுரம் திடீரென்றுஅடியோடு சரிந்து விழுந்தது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோபுரம் சரியும் போது, கீழ் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 25தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பி விட்டனர்.

விபத்தில் இறந்தவர்கள் ராஜகோபால் (வயது 34), நாகராஜ் (வயது 27), மதியழகன்(வயது 23) செல்வம் (வயது 26), சரவணன் (வயது 20), வெங்கடாசலம் (வயது24)என்று தெரியவந்துள்ளது.

உயரிழந்த மற்றொருவர் பற்றிய முழு விவரம் தெரியவில்லை. படுகாயமடைந்தமேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுவிசாரணை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+