இலங்கை அமைச்சர்கள்-எதிர்கட்சியினர் நாளை பேச்சு
கொழும்பு:
இலங்கையில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளும் மக்கள் முன்னணிஅமைச்சர்கள் 6 பேரும், எதிர்க் கட்சியான யு.என்.பி யைச் சேர்ந்த 4 தலைவர்களும் சந்தித்துப் பேச முடிவுசெய்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சந்திரிகா அரசில் அமைச்சர்களாக இருக்கும் ஜெயரத்னே, மஹிந்தா ராஜாபக்ஷே,லக்ஷ்மண் கதிர்காமர், அனுருத்த ரத்வதே, மங்கல சமரவீர மற்றும் நிமல் ஸ்ரீபால டி சில்வ ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
முக்கிய எதிர்கட்சியான யு.என்.பி. தரப்பில் இருந்து அதன் துணைத் தலைவர் கரு ஜெயசூர்யா, சரிதா ரத்வதே,டைரோன் பெர்ணாண்டோ மற்றும் சோஷ்கி ஆகிய 4 பேர் கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் வரும் 25ம் தேதி முதல் 28 வரை பேச்சு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. நாட்டில் அரசியல்குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிப்பது குறித்து பேச இருப்பதாகத் தெரிகிறது.
எதிர்கட்சித் தலைவரான ரனில் விக்கிரமசிங்கே இன்றே பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இதற்கு இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே வரவேற்பு தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தையில் என்னென்னஇடம் பெற வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பிறகு தொடங்கினால்தான் பயனுள்ளதாக இருக்கும்என்று கூறினார். அதன்படி நாளை 2 கட்சிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 115 எம்.பிக்கள் ஆதரவைப் பெற்றுள்ள எதிர்கட்சிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்கள் தரப்பில் அரசின் பாராளுமன்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைஎதிர்த்தும், வரும் அக்டோபர் 18 ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பை ரத்து செய்யவும்கோருவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இலங்கையில் இவ்வாறு 2 முக்கிய எதிர்கட்சிகளும் சந்தித்து நாட்டில் நிலைத்த ஆட்சியை ஏற்படுத்த முயல்வதைஅமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications