தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க கம்யூனிஸ்ட் கோரிக்கை
சென்னை:
தென் மாவட்டங்களில் புதியதாக தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை பெருக்க அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் மகேந்திரன் சட்டசபையில் கூறினார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடையே அடிக்கடி பிரச்சனைகளும், கலவரங்களும்ஏற்படக் காரணம் வேலையின்மைதான்.
இதைத் தான் அந்தப் பகுதியில் ஜாதிக்கலவரங்கள் நடந்தபோது, அதற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்துஅறிக்கை அளித்த நீதிபதி மோகன் கமிஷனும் கூறியது.
அதன் பிறகு நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் அந்தப் பகுதிகளை ஆராய்ந்த குழுவும் அந்தப் பகுதியில்வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றுதான் பரிந்துரைத்தது.
ஆனால் கடந்த திமுக அரசு தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை.
மேலும் தமிழகத்திலிருந்து 5 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழ்நாட்டின் நீண்டகாலக் கனவான சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
இதையடுத்துப் பேசவந்த கரூர் சிவசுப்ரமணியம் கூறியதாவது,
கரும்புக்கு நல்ல விலை அறிவிக்க வேண்டும். ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்தை புனரமைக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.












Click it and Unblock the Notifications