வேதாரண்யத்தில் தீ விபத்து: மக்கள் தாக்கி 3 போலீசார் காயம்
வேதாரண்யம்:
நாகப்பப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே 2 வீடுகளில் திடீரென தீப்பிடித்ததையடுத்து, போலீசாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்கியதில்3 போலீசார் காயமடைந்தனர்.
இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், போலீசார் தீபிடித்த இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வண்டியும் சம்பவ இடத்திற்கு சென்றது.
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போலீசாரையும், தீயணைப்பு வீரர்களையும்,"எல்லாம் முடிந்த பிறகு எதற்கு வந்தீர்கள்?" என கேட்டு தகராறு செய்தனர்.
இந்நிலையில் தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட வேதாரண்யம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் போலீஸ்படையுடன் அங்கு வந்தார்.அவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போலீசாரின் சமாதானவார்த்தைகளை மக்கள் ஏற்க மறுத்ததால் அங்கு பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
இந்த நிலையில் சிலர் மரங்களை வெட்டி நடு ரோட்டில் போட்டு போக்குவரத்தை தடை செய்ய முயன்றனர்.இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் கூட்டம் கலையவில்லை. எனவே போலீசார் வானத்தைநோக்கி 2 முறை சுட்டதும் கூட்டம் கலைந்து ஓடியது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 போலீஸ் ஜீப்புகள் மற்றும் அந்தப் பகுதியாக வந்த வாகனங்கள் மீது,மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
போலீசார் மீது மக்கள் கல்வீசி தாக்கியதில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி மற்றும் போலீசார்பாலசுப்ரமணியமும் வேறொரு போலீசாரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது இங்கு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளாதால் அங்கு அமைதி நிலவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகாலை சம்பவ இடத்தை வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம் பார்வையிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக உடையத்தேவன் காடு கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் (51), பக்கிரி சாமி (41). ரஜினி(21), உத்திராபதி (20) உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications