ஈவ் டீசிங்கைத் தடுக்க புதிய சட்டம் வருகிறது
சென்னை:
ஈவ் டீசிங்கை தடுக்க புதிய சட்டம் போடப்படும் என்றும், ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றம் சட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி கூறினார்.
ஈவ் டீசிங்கை தடுக்க புதிய சட்டம் போடப்படும். ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வழக்கு தொடர வழி வகை செய்யப்படும்.
செப்டம்பர் மாதம் வரை 445 பாலியல் பலாத்கார வழக்களும், பெண்களை கடத்தியதாக 774 வழக்குகளும்,வரதட்சனை கொடுமை சம்பந்தமாக 146 வழக்குகளும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாக 2,242வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இது போன்ற அவலங்கள் நடப்பதற்கு காரணம், மகளிர் காவல் நிலையங்கள்சரிவர செயல்படாததுதான். மகளிர் காவல் நிலையங்கள் இனி சரிவர இயங்கச் செய்யப்படும்.
மேலும், இன்டர் நெட், ஆபாச சினிமாக்கள் மற்றும் சினிமா சுவரொட்டிகள் போன்றவை மூலமாகவும்இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்னியாகுமரியில் ஈவ் டீசிங் கொடுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அமுதா சம்பந்தப்பட்டவழக்கில், இது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications