விஷச் சாராயம்: இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25,000 ஜெ. நிதியுதவி
சென்னை:
சென்னை-அம்பத்தூர் அருகே விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, தலா ரூ.25,000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், விஷ சாராயம் குடித்து இறந்து போன 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 முதல்வர்நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையாக வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தால்கண்பார்வை இழந்துள்ள 4 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகையாக வழங்குமாறும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
விஷச் சாராய சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தனக்கு மிகவும்வருத்தத்தை அளித்திருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் அவர் மருத்துவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், விஷ சாராயம் குடித்து இறந்தவர்கள், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள்ஆகியோருக்கு நிவாரணமாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.3,65,000 வழங்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications