ஜெ. வீட்டருகே தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்
சென்னை:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் அருகே தீக்குளித்த மதுரையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் நேற்று(திங்கள்கிழமை) மரணமடைந்தார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு வீடு கட்ட கடன் உதவி கேட்டு ஜெயலலிதாவிடம் மனு கொடுக்கவந்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவைப் பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்து விட்டனர்.
இதனால் விரக்தியடைந்த பாண்டியன், ஜெயலலிதாவின் வீடு அருகே தீக்குளித்தார். அப்போது அவருடன் இருந்தஅவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இதுபற்றிய செய்தி அறிந்ததும், பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர்உத்தரவிட்டார். இவர் நடு ரோட்டில் தீக்குளிக்கும் போது அதைத் தடுக்கத் தவறிய 4 போலீசாரும் சஸ்பெண்டுசெய்யப்பட்டனர்.
மேலும் பாண்டியன் கேட்ட வீடு கட்ட கடன் உதவியை அவருக்கு வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கைஎடுக்கும்படி மதுரை மாவட்டக் கலெக்டருக்கு உத்தரவிட்ட ஜெயலலிதா, பாண்டியனுக்கு ரூ.10,000 உதவித்தொகை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் நேற்று (திங்கள்கிழமை) மாலைமரணமடைந்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications