தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு
மும்பை:
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் உலக அளவில் தங்கத்தின் ஏற்றுமதிஇறக்குமதி பாதிக்கப்படும் என்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துவருகிறது.
இந்தியாவிலும் தங்க, வெள்ளிப் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும்சில நாட்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4,725. இது இந்தஆண்டின் அதிக பட்ச விலையாகும். சிறிது நேரத்தில் விலை ரூ 4.710 ஆகக்குறைந்தது.
வெள்ளிக்கிழமை விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது இது ரூ.10 அதிகம் ஆகும்ஏனென்றால் வெள்ளிக்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4, 700 தான்.
சனிக்கிழமை காலை 10 தோலா தங்க கட்டியின் விலை ரூ 55,400 என்று இருந்தது.இதுவும் விற்பனை துவங்கிய சில மணி நேரத்தில் ரூ 55,200 ஆகக் குறைந்தது.ஆனாலும், இது வெள்ளிக்கிழமை விலையை விட ரூ 200 கூடுதலாகும்.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகமாகி வருவது தங்கதிற்கு சந்தையில்ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டையே காட்டுகிறது. தங்கம் விற்பனையில்ஈடுப்பட்டுள்ளவர்களும் சந்தைக்கு தங்கம் வரும் அளவும் குறைந்து வருவதாகக்கூறுகின்றனர்.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அச்சம் தரும் விதமாக மிகஅதிகமாக உயர்ந்தது. அதன் பின் தங்கத்தின் விலை அதிகமாக உயரவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4,825 என்று உயர்ந்துமக்களை தங்கத்தின் அருகில் நெருங்க விடாமல் அச்சுறுத்தியது. அதன் பிறகுஇப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4,725யை எட்டியுள்ளது.
லண்டனிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலைவியாழக்கிழமை 280.00 அமெரிக்க டாலர் என்று இருந்தது. இது உயர்ந்துவெள்ளிக்கிழமை 256.30 அமெரிக்க டாலரானது.
ஹாங்காங்கில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 284.50 அமெரிக்க டாலர் ஆகஉயர்ந்துள்ளது.
இந்தியாவில் வெள்ளியின் விலையும் மிகவும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை 1 கிலோவெள்ளியின் விலை ரூ 7,355 என்று இருந்தது. வெள்ளி வரும் அளவும் குறைந்துவருவதால் அதன் விலை ரூ 7,370 என்று உயர்ந்துள்ளது. இது முன்பு இருந்த விலையைவிட ரூ 85 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications