தலிபான்களை தாக்கி முன்னேறும் எதிர் படையினர்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் தலிபான் படையினரைஎதிர்த்து வேகமாக முன்னேறி வருகின்றனர்.
மேலும் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதலை அடுத்து, அமெரிக்காவும் தலிபான்கள் மீதுபோர்தொடுக்கும் நிலையில் உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் அதிகரித்து வருகிறது.
தற்போது நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் தலிபான் வசமிருந்த டக்கார் மாகாணத்தை பிடிக்க கடுமையாகப்போராடிவருகிறார்கள். தற்போது நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் டக்கார் தலைநகர் டாலகானைநெருங்கிவிட்டனர்.
இந்நகரம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. மேலும் டாலகான் தற்போது தலிபான்களின்வசம் உள்ளதால், அதைப் பிடித்தால்தான் தங்கள் ஆதரவு நாடான தஜிகிஸ்தானுக்குச் செல்ல நார்தர்ன்அல்லயன்சுக்கு வசதியாக இருக்கும்.
எனவே நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் கடுமையாகப் போராடி முன்னேறி வருகின்றனர்.
இதுகுறித்து நார்தர்ன் அல்லயன்ஸ் படைவீரர்கள் கூறுகையில், இந்தப் பகுதியைப் பிடிக்க நாங்கள் கடுமையாகப்போராடி வருகிறோம். இன்னும் சில நாட்களில் நாங்கள் அதைப் பிடித்துவிடுவோம். முதலில் சிறுசிறுகிராமங்களைப் பிடித்துவிட்டு, பிறகு பெரிய நகரங்களைப் பிடிப்பதே எங்கள் திட்டம் என்கின்றனர்.
தொடர்ந்து தீவிர போர் நடந்து வருகிறது. அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ள தனது படைகளை தலிபான்கள்நாடு முழுவதும் அனுப்பிவிட்டதால், எதிர்ப் படையினரான நார்த்தர்ன் அலையன்ஸை எதிர்த்துப் போரிடஅவர்களிடம் போதிய படை பலம் இல்லை.
இதனால் தலிபான்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications