திண்டுக்கல்லில் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மருமகள் மீட்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சீவல்சரகு என்ற கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஒரு பெண்ணை அவரது மாமியார்வீட்டுக்குள் பூட்டிவைத்து கொடுமைப் படுத்தியதைப் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
திண்டுக்கல் மாவட்டத்தில் சீவல்சரகு கிராமத்தில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு வசிக்கும் சியாமளா என்றபெண்ணை அவரது மாமியார் அலமேலு வீட்டுக் பூட்டிவைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதைசியாமாவின் கணவரும் கண்டுகொள்ளவில்லை
இதுகுறித்து திண்டுக்கல் உதவிக்கரம் என்ற போலீஸ் அமைப்புக்கு ராஜேந்திரன் என்பவர் தகவல் கொடுத்துள்ளார்.
(இந்த உதவிக்கரம் அமைப்பு பெண் போலீசாரைக் கொண்டது. பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளான,வரதட்சணைக் கொடுமை, ஈவ்டீசிங் போன்ற கொடுமைகளை தடுப்பதற்காக இந்த அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பை 1091 எனற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)
தகவல் அறிந்தவுடன் இவர்கள் சீவல்சரகு சென்ற போலீசார் அலமேலுவை மிரட்டி சியாமளாவை விடுவித்தனர்.ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் சியாமளா.
இனிமேல் அலமேலுவுடன் சேர்ந்து வசிக்க விரும்பவில்லை என சியாமளா கூறினார். இதையடுத்து சியாமளாவின்கணவருடன் போலீசார் பேச்சு நடத்தினர். அவர் தனது தாயிடம் இருந்து தனியே பிரிந்து தனிக்குடித்தனம் நடத்தத்தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆனால், இதை அலமேலு எதிர்த்தார். இதையடுத்து அலமேலுவுடன் போலீசார் பேச்சு நடத்தி அவரது மகனைதனிக்குடித்தனம் செல்ல சம்மதிக்க வைத்தனர்.
பின்னர் போலீசாரே அவர்கள் தனிக் குடித்தனம் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications