இன்று கூடுகிறது காவிரி நதி நீர் ஆணையம்
சென்னை:
இன்று (புதன்கிழமை)கூடவிருக்கும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய கர்நாடக அரசு திறந்துவிடாததாலும், பருவ மழை பொய்த்து விட்டதாலும்தமிழகத்தில் குறுவை பயிர்கள் வாடி வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று காவிரி நதிநீர்கண்காணிப்புக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது கர்நாடகத்திலும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கமுடியாது என்று கர்நாடகம் கூறிவிட்டது.
இதையடுத்து அனைத்துக்கட்சி குழு தமிழகத்திலிருந்து டெல்லி சென்று தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறுகர்நாடகத்தை வற்புறுத்த வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டது.
இது குறித்து விவாதிக்க காவிரி நதி நீர் ஆணையத்தை சென்ற மாதம் 22ம் தேதி கூட்டுவது என்று மத்திய அரசுமுடிவு செய்தது. ஆனால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் இன்று (புதன்கிழமை) பிரதமர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு விமானம் மூலம்டெல்லி சென்றார்.
விமான நிலையத்தில், "காவிரி நதி நீர் ஆணையத்தை உங்கள் கட்சி நம்பவில்லை. இப்போது நடைபெறவுள்ளகூட்டத்தில் நல்ல முடிவு ஏற்படுமா?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "பேச்சுவார்த்தையை வெற்றிகரமாகமுடித்து வருவேன்" என பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பன்னீர்செல்வத்துடன் தமிழக நிதி அமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் சங்கர் ஆகியோரும்சென்றனர். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகமும் பன்னீர்செல்வம் சென்ற விமானத்தில் டெல்லி சென்றுள்ளார்.கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் இன்று காலை பெங்களூரிலிருந்து கிளம்பி டெல்லி சென்றுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications