அதிமுகவுக்கு வயது 30
சென்னை:
அதிமுகவின் 30வது ஆண்டு விழா சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் வரும் 17ம் தேதி விமரிசையாகக்கொண்டாடப்படுகிறது.
அதிமுகவை தொடங்கி 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து வரும் 17ம் தேதி கட்சியின் 30வதுஆண்டு துவங்குகிறது. இதையொட்டி அதிமு-க தலைமைக் கழக அலுவலகத்தில் சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
காலையில் அதிமுக அலுவலகத்திற்கு வரும் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அங்குள்ள எம்.ஜி.ஆரின்உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகியபோது உயிர் நீத்த அதிமுகதொண்டர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குகிறார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியில் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றுஅதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
