சிதறுகிறது தலிபான் படை: இந்தியா தகவல்
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்தி வரும் தாக்குதலால் தலிபான் படைகள் கட்டுப்பாட்டைஇழந்து சிதறி வருகின்றன என இந்தியா கூறியுள்ளது.
அவர் கூறுகையில்,
தக்கார் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் தலிபான்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் சுற்றி வளைத்துத்தாக்கி வருகின்றனர். இதனால் வானிலிருந்து அமெரிக்கா அடிக்க தரையிலிருந்து நார்த்தன் அலையன்ஸ் அடிக்கதலிபான்கள் சிதறி வருகின்றனர்.
இந்தச் சண்டையில் பல தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். நார்த்தர்ன் அலையன்ஸ் தரப்பிலும் இருகமாண்டர்கள் இறந்துள்ளனர்.
தலிபான்களின் விமான எதிர்ப்புப் படையின் கமாண்டர் அமெரிக்க குண்டுவீச்சில் கொல்லப்பட்டுவிட்டார்.அவர்களின் விமான எதிர்ப்புக் கட்டமைப்பும் குலைக்கப்பட்டுவிட்டது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானி,தஜிகிஸ்தான் அதிபரை அவரது நாட்டில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று பாகிஸ்தானில் வந்திறங்கிய 3 ஆப்கானிஸ்தான் விமானங்களை பாகிஸ்தான் கையகப்படுத்தியது.அமெரிக்க நெருக்குதலையடுத்து இவற்றை பாகிஸ்தான் பிடித்து வைத்தது. ஆனால், இன்று அதில் 2ஹெலிகாப்டர்களை தலிபான்களிடமே பாகிஸ்தான் திருப்பி வழங்கியுள்ளது.
தலிபான் தலைவர் முல்லா ஒமரின் நெருங்கிய உறவினர்கள் 2 பேர் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 1 மில்லியன் டன் கோதுமை வழங்கஇந்தியா திட்டமிட்டுள்ளது. இது தவிர ஆயிரக்கணக்கான கூடாரங்களும் வழங்கப்படும்.
ஆப்கானிஸ்தனில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டால் இந்தியாவுக்கும் அது மிகஉதவிகரமாக இருக்கும். இந்த முகாம்களில் பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பயிற்சி தந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் குறித்து செய்தி சேகரிக்க பாகிஸ்தான் செல்ல விரும்பும் இந்திய நிருபர்களுக்கு பாகிஸ்தான் விசாவழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications