உள்ளாட்சி தேர்தல்... பாதுகாப்பு பணியில் 75 ஆயிரம் போலீசார்
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 75 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் என்று தமிழகஅரசின் உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்ததேர்தல் அமைதியான முறையில் நடைபெற எல்லா இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நரேஷ் குப்தா நிருபர்களுக்கு பேட்டியளித்த போதுகூறுகையில்,
உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த 71 துணை ராணுவ படையை அனுப்புமாறு மத்திய அரசிடம் தமிழகஅரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனாலும் நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதால் தமிழக அரசின்கோரிக்கை ஏற்கப்படுமா என்பது தெரியவில்லை.
தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக போலீசுக்கு உதவி புரிய 12 படைகளை அனுப்பி வைக்குமாறு கர்நாடகா,ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநில அரசுகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், ஆயிரம் ஓய்வுபெற்ற போலீசார், 1,500தீயணைப்பு போலீசார், 13 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள்.
மேலும் இது தவிர 38 ஆயிரம் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்திற்கு ஒருதமிழக சிறப்பு போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
தமிழகம் முழுவதிலும் 78 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 16ம் தேதி முதல் கட்டமாக 42ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் 18ம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications