தமிழகத்தில் ஆந்த்ராக்ஸ் யாரையும் தாக்கவில்லை - நலத்துறை செயலர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கப்பட்டதாக இதுவரை ஒரு புகாரும் வரவில்லை தமிழக நலத்துறைசெயலாளர் சையது முனீர் ஹோதா கூறியுள்ளார்.
அமெரிக்காவையே கலக்கிக் கொண்டிருக்கும் ஆந்த்ராக்ஸ் உயிர்க் கொல்லி கிருமிகள், இந்தியாவில் கர்நாடகத்தில்மட்டும் இதுவரை 3 பேரைப் பலி வாங்கியுள்ளது.
தமிழகத்திலும் முதுமலை வனப்பகுதியில் ஒரு யானை ஆந்த்ராக்சுக்குப் பலியாகியுள்ளது.
ஆனால் இதுவரை தமிழகத்தில் மனிதர்கள் யாரையும் ஆந்த்ராக்ஸ் தாக்கியதாகத் தகவல்கள் இல்லை.
ஆந்த்ராக்ஸ் கிருமிகளைத் தடுக்கும் எதிர்ப்பு மருந்துகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக ஹோதா கூறினார்.
ஆந்த்ராக்ஸ் பரவிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கு தடுப்பு மருந்துகள்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications