ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் சுட்டு ஒருவர் பலி
ஜம்மு:
ஜம்முவில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இரவு பாகிஸ்தான்ராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே ஹிராநகர், ஆர்.எஸ். புரா மற்றும் சம்பா ஆகிய பகுதிகளில் நேற்று மாலை பாகிஸ்தான்படையினருக்கும் இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
மேலும், ஹிராநகர் பகுதியில் பாகிஸ்தான் நேற்று ஷெல் தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்தபகுதியில் இந்தத் தாக்குதல் நடந்த போதிலும், இதில் யாரும் காயமடையவில்லை.
7 தீவிரவாதிகள் உள்பட 10 பேர் கொலை
இதற்கிடையே, ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளில் ஊடுருவ முயன்ற 7தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகள் திருப்பிச் சுட்டதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications