30வது ஆண்டு விழா கொண்டாடுகிறது அதிமுக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு, நேற்றுடன் 29 ஆண்டுகள் முடிவடைந்து,இன்று 30வது ஆண்டு பிறந்துள்ளது.
இதையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலைஅணிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
பின்னர் அதிமுக கொடியையும் ஏற்றிய ஜெயலலிதா, அதிமுக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதவி செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு தற்கொலைசெய்து கொண்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகையையும் புதன்கிழமை (இன்று)ஜெயலலிதா வழங்கினார்.
மேலும் அதிமுகவின் 30வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இன்று பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications