நாளை 2வது கட்ட தேர்தல்... வன்முறையாளர்களை சுட்டுத் தள்ள தேர்தல் கமிஷன் கோரிக்கை
சென்னை:
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, வியாழக்கிழமைவியாழக்கிழமை (நாளை) நடைபெறும் இரண்டாவது கட்ட தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடுபவர்களைச்சுட்டுத் தள்ளுமாறு தமிழக போலீசை மாநில தேர்தல் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேர்தல் பார்வையாளர்கள் தந்த அறிக்கைகளின் அடிப்படையில், தமிகம் முழுவதும் மொத்தம் 173 வாக்குசாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்கு பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நாளை இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மதுரை, திருச்சி ஆகிய 2மாநகராட்சிகளுக்கும், 58 நகராட்சிகளுக்கும், 302 பேரூராட்சிகளுக்கும், 189 ஊராட்சி ஒன்றியங்களுக்கும்வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாவது கட்ட தேர்தலில் 2 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 307 வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 1கோடியே 10 லட்சத்து 20 ஆயிரத்து 462 பேர் ஆண் வாக்காளர்கள். 1 கோடியே 6 லட்சத்து 77 ஆயிரத்து 845 பேர்பெண் வாக்காளர்கள்.
37 ஆயிரத்து 286 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 கோடி வாக்கு சீட்டுகள் தயாராக உள்ளன.இரண்டாவது கட்ட தேர்தலுககான பிரச்சாரம் நேற்று மாலை 5.30 மணியுடன் முடிவடைந்தது.
முதல் கட்ட வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, பல இடங்களில் போலீசார் கண்டும்காணாதது போல் இருந்துள்ளனர்.
எனவே இதைக் கருத்தில் கொண்டு, தமிழகக் காவல் துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் தேர்தல் கமிஷனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications