ஆந்திராவில் புயல், வெள்ளம்: 22 பேர் பலி
ஐதராபாத்:
ஆந்திரா மாநிலம் நெல்லூர் கடற்கரையில் வீசிய புயலுக்கு 22 பேர் பலியாகியுள்ளனர் மீட்பு பணிகள் முழு வீச்சில்நடைபெற்று வருகின்றன.
புயல் கரையைக் கடந்த போது பெய்த கடும் மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிவாரணதுறை கமிஷனர் கே. ரோஷையா செய்தியாளர்களிடம்கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை வீசிய புயல் காரணமாக பெய்த கடும் மழைக்கு கர்னூலில் 16 பேர் பலியாகியுள்ளனர்.சித்தூரில் 4 பேரும், ஆன்ந்தபூர் மற்றும் நெல்லூரில் ஒருவரும் பலியாகியுள்னர். ஆனாலும் எத்தனை பேர் இறந்துபோயுள்ளனர் என்று உறுதியிட்டு இப்போது கூற முடியாது.
கடப்பா பகுதியில் காணமல் போன 15 பேர் புகாவாகு ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
புயலில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி நெல்லூர்தான். இங்குள்ள 125 குளங்களும் நிரம்பி வழிகின்றன.
குண்டூருக்கும், சென்னைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலான ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. சில ரயில்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ரயில் ரத்து செய்யப்பட்டதால் செல்ல முடியாமல் வெள்ளம் சூழப்பட்டுள்ள பகுதியில் தவித்து வரும் பயணிகளுக்குஹெலிகாப்டர் மூலமாக உணவுப் பொட்டலம் போடப்படுகிறது என்று கூறினார்
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், குண்டூர்-சென்னை இடையேயான ரயில் போக்குவரத்து புதன்கிழமை மாலைதுவங்கிவிடும். சேதமடைந்துள்ள ரயில் பாதைகள் இரண்டு நாட்களில் முழுவதுமாக சரிசெய்யப்பட்டுவிடும்.
மங்களகிரி பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டுள்ளதால் வேறு பாதைகளில் ரயிலை திருப்பி விட முடியாத நிலைஉள்ளது.
இந்நிலையில் கடப்பா பகுதியை புதன்கிழமை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புயலால்பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எல்லா உதவியும் செய்வதாக உறுதி அளித்தார்.
புகாவாகு ஏரியின் திறந்துவிடப்பட்டதால்தான் கடப்பா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. ஏரி ஏன்திறந்துவிடப்பட்டது என்பது குறித்து விவரமான அறிக்கையை சமர்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications