இஸ்ரேலிய அமைச்சர் சுட்டுக் கொலை
ஜெருசலேம்:
இஸ்ரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் ரஹவாம் ஸீவி சுட்டுக் கொல்லப்பட்டார். பாலஸ்தீன போராட்ட அமைப்பின்தலைவரை இஸ்ரேல் கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்துள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக ஹடாஸா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைபலனின்றி பிற்பகலில் இறந்தார்.
இவரை நாங்கள் தான் சுட்டோம் என்று பி.எல்.ஓ. அமைப்பின் பாலஸ்தீன விடுதலை இயக்க முன்னணிஅறிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான முஸ்தபா ஜிப்ரி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி இஸ்ரேலியராணுவத்தால் கொல்லப்பட்டார். இவரை ராக்கெட் வீசி இஸ்ரேல் கொன்றது.
இதற்குப் பதிலடியாகத் தான் இஸ்ரேலிய அமைச்சரைக் கொன்றதாக பாலஸ்தீன அமைப்பு கூறியுள்ளது. ஆனால்,முஸ்தபா இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந் நாடு குற்றம் சாட்டியுள்ளது.
அமைச்சரைக் கொன்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனர்களின் ரத்தம் அவ்வளவுகேவலாமானது அல்ல என்பதை இஸ்ரேல் உணர வேண்டும். பாலஸ்தீனர்களைத் தாக்கும் இஸ்ரேலியர்களுக்குஇனி பாதுகாப்பு இருக்காது. எங்களைத் தாக்கினால் உயிர் பழி வாங்குவோம் என்று அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமெரிக்கத் தாக்குதலையடுத்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பிரச்சனைமுற்றியுள்ளது. இந் நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications