பாண்டிச்சேரி முதல்வருக்கு எம்.எல்.ஏ. "சீட்" கிடைத்தது
பாண்டிச்சேரி:
தான் போட்டியிவதற்கு வசதியாக எம்.எல்.ஏ. யாரையாவது ராஜினாமா செய்ய வைக்க முயன்று முயன்று வெறுத்துப் போயிருந்தபாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகத்துக்கு உதவ இறுதியாக ஒரு எம்.எல்.ஏ. முன் வந்துள்ளார்.
இதனால் சண்முகம் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்ய கோட்டுச்சேரிஎம்.எல்.ஏ. முன் வந்துள்ளார்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்ளது. இதற்கு ப.சண்முகம் தலைமை தாங்குகிறார். ஆனால் அவர்தற்போது எம்.எல்.ஏவாக இல்லை. அடுத்த மாதத்திற்குள் அவர் எம்.எல்.ஏவாகாவிட்டால் முதல்வர் பதவியை இழக்க நேரிடும்.
ஆனால், அவருக்கு உதவ காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் பதவியை ராஜினாமா செய்ய முன் வரவில்லை.
ஒவ்வொரு எம்.எல்.ஏவாக கூப்பிட்டு பேசிப் பார்த்தும் சரி வரவில்லை. இந் நிலையில் கோட்டுச்சேரி எம்.எல்.ஏ. நளமகராஜன் மற்றும்திருநள்ளாறு எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் ஆகியோரில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதிலும் நளமகராஜன் கண்டிப்பாக ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. மேலிடக் கட்டாயமே இதற்கு பின்னணியாககூறப்படுகிறது.
இதையடுத்து சண்முகம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வென்றால் தனது முதல்வர் பதவியைதக்க வைத்துக் கொள்ள சண்முகத்தால் முடியும்.
கடந்த தேர்தலில் நளமகராஜன் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ராமதாஸைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications