சேலம், தருமபுரியுலும் வன்முறை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது சேலம் மற்றும் தர்மபுரியிலும் வன்முறைவெடித்தது.

சேலம் மாநகராட்சி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலையில் தொடங்கிய தேர்தல் அமைதியாகநடந்து கொண்டிருந்தது.

நெத்திமேடு, மணியனூர் பகுதிகளை கொண்ட 49வது வார்டுக்கான தேர்தல் நெத்திமேடு நகராட்சிதுவக்கப்பள்ளியில் நடந்தது. இந்த வாக்கு சாவடிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின்எண்ணிக்கை 822.

மாலை 3 மணிவரை வாக்கு பதிவு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் 20 பேர் கொண்ட கும்பல்ஒன்று திடீரென்று வாக்கு சாவடிக்குள் நுழைந்தது.

அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தள்ளிவிட்டு, தேர்தல் அதிகாரிகளிடமிருந்த வாக்குசீட்டுகளை வாங்கி சில வாக்கு சீட்டுகளில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருடைய சின்னத்தில் கள்ள ஓட்டு போட்டனர்.

மேயர் தேர்தலுக்கான வாக்கு சீட்டை முழுவதுமாக கிழித்து எறிந்து விட்டு தப்பி ஓடினர்.

இந்நிலையில் அங்கு வந்த பாமக மாநகராட்சி வேட்பாளர் அருள் தனது வெற்றி உறுதியாகிவிட்டதால் அதைபொறுக்க முடியாதவர்கள் செய்த சதி என்று கூறினார்.

பாமகவினரும் அவர்களது கூட்டணி கட்சியினரான திமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுகவின்அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர். மறுதேர்தல் வேண்டாம் தொடர்ந்து வாக்கு பதிவு நடந்த வேண்டும்என்றும் கோரிக்கை எழுப்பினர். பின்-னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிமுகவின் போட்டி வேட்பாளர் சுகுணபதியின் ஆட்கள் தான் இந்த அராஜக செயல்களை செய்தனர் என்றும்பைப் சின்னத்திற்கு முத்திரை குத்தப்பட்டிருந்த வாக்கு சீட்டுகளை காட்டி மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றுஅ-தி-மு-கவினர் கோஷமிட்டனர். அவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமாகா வேட்பாளர் பரமேஸ்வரியும் சுகுணபதி மீதிதான் குற்றம் சாட்டினார்.

அப்போது அங்கு வந்த அதிமுக மேயர் வேட்பாள் சுரேஷ் மற்றும் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் ஆகியோர்கலெக்டரிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதும் மறியல் கைவிடப்பட்டது.

காங்கிரஸ் ஜனநாயக பேரவை மாவட்ட செயலாளர் ஜெயராமன் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றுகூறினார்.

மீண்டும் மாலை 5.15க்கு வாக்கு பதிவு துவங்கியது. மாலை 5.30 மணிவரை வாக்கு பதிவு நடந்தது.

822 வாக்காளர்களை கொண்ட அந்த வாக்கு சாவடியில் 498 பேர் மட்டும் வாக்களித்திருந்தனர்.

தர்மபுரி:

வாக்கு பதிவின் போது தர்மபுரியில் ஏற்பட்ட வன்முறை, கள்ள ஓட்டு காரணமாகவும், கோஷ்டி சண்டைகாரணமாகவும் 27 வாக்கு சாவடிகளில் மறு வாக்கு பதிவு நடத்துமாறு தர்மபுரி ஆட்சி தலைவர் அபூர்வாஉத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+