பயம் வேண்டாம்: அதிகாரி சொல்கிறார்
சென்னை:
ஆந்த்ராக்ஸ் கிருமி மூலம் பரவும்நோய் குறித்து மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. இந்த நோய் தமிழகத்தில்பரவாமல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கால்நடைக் கல்வித் துறை இயக்குனர் கே.ராஜசேகரன்கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பரவி வரும் ஆந்த்ராக்ஸ் நோய் தமிழகத்திலும் பரவி வருவதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஆந்த்ராக்ஸ் கிருமியால் பரவும் அடைப்பான் என்ற நோய் குறித்து மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்றுராஜசேகரன் கூறியுளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆந்த்ராக்ஸ் மூலம் பரவும் அடைப்பான் நோய் கால்நடைகளை தாக்குகிறது. தோல் பதனிடும் தொழிலில்ஈடுபட்டுள்ளவர்கள், கால்நடை இறைச்சி கூடங்களில் பணிபுரிபவர்களையும் இந்த நோய் தாக்கும் வாய்ப்புள்ளது.
இந்த நோய் கால்நடைகளை தாக்குவதால் முறையான தடுப்பு ஊசிகள் போட்டால், நோய் பரவமால் தடுக்கலாம்.
தற்போது இந்த நோய் கால்நடைகளில் மிக குறைந்த அளவில் மட்டுமே காணப்படுகிறது. ராணிப்பேட்டையில்உற்பத்தி செய்யப்பட்டுவரும் தடுப்பு மருந்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆந்த்ராக்ஸ் கிருமி மூலம் பரவும் நோய்கால்நடைகளுக்கு அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்த்ராக்ஸ் கிருமி மூலம் பரவும் நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களிக்கு பரவும். ஆனால்மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. இந்த நோய் மனிதர்களை தாக்கிய எண்ணிக்கையும் குறைவு.
கால்நடைகளில் மாமிசத்தை உண்பதால் இந்த நோய் பரவும் வாய்ப்பு உண்டு என்றாலும், நமது நாட்டில் உணவுவகைகளை கொதிக்க வைத்து உண்பதால் இந்த நோய் மாமிசம் மூலம் பரவவ் வாய்ப்பும் குறைவு.
மக்கள் யாரும் வதந்திகளை நம்பி பயம் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications