193 வாக்குச் சாவடிகளில் நாளை மறு தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2வது கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக, 193 வாக்குச்சாவடிகளில் நாளை (சனிக்கிழமை) மறு தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்ட வாக்குப் பதிவில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக, இன்று 306 வாக்குச் சாவடிகளுக்குஅமைதியான முறையில் மறு தேர்தல் நடந்தது.
துப்பாக்கி ஏந்திய போலீசார் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நிறுத்தப்பட்டிருந்ததால், இன்று வன்முறைச்சம்பவங்கள் எதுவும் தலை தூக்கவில்லை.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள்காரணமாக, தமிழகம் முழுவதிலுமுள்ள 193 வாக்குச் சாவடிகளில் நாளை மறு தேர்தல் நடைபெறுகிறது.
மாநில தேர்தல் கமிஷனர் பி.எஸ். பாண்டியன் இத்தகவலை இன்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications