தாமரைக்கனி, மகன் மோதல் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பதட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவருக்கு திமுக சார்பில் போட்டியிடும் தாமரைக்கனியின் ஆதரவாளர்களுக்கும்,அவரது மகனும் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில்அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை (இன்று) பதட்டம் நீடித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.தாமரைக்கனி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தாமரைக்கனியின் மகனும், அதிமுகஎம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, தாமரைக்கனி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று வாக்குப் பதிவு நடைபெறுவதை பார்வையிட்டுச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரைத் தொடர்ந்து அவரது மகன் இன்பத்தமிழனும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவேட்பாளரும் சென்றனர்.
கம்மாபட்டி என்ற இடத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது இரு பிரிவினருக்கும் இடையே கடும்மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து இன்றும் அந்தப் பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications