நியூயார்க்கில் அடுத்த மாதம் வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு?
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் நவம்பர் மாதம் நியூயார்க்கில் சந்தித்துப் பேசவாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறினார்.
பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் கூறிய சத்தார், இந்தியா விரும்பினால்நியூயார்க்கிலேயே வாஜ்பாய்-முஷாரப் சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருவருமே அடுத்த மாதத் துவக்கத்தில் அமெரிக்காசெல்லவுள்ளனர்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து இனிமேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று இந்தியா கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications