பன்னீர் செல்வத்திற்கு அதிர்ச்சி வைத்தியம்
சென்னை:
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரியகுளம் நகராட்சித்தலைவர் தேர்தலில் இந்த முறை திமுக வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் பெரியகுளம். கடந்த உள்ளாட்சித் தேர்தலில இந்த நகராட்சித் தலைவராகபன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், தென் மாவட்டங்களிலேயே அப்போது நகராட்சி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே அதிமுக வேட்பாளர்இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பெருமை பெற்ற பெரியகுளம் இந்த முறை பன்னீர் செல்வத்தையும், அதிமுகவையும் ஏமாற்றி விட்டது.பெரியகுளம் நகராட்சித் தலைவராக திமுக வேட்பாளர் கமது இலியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவேட்பாளர் நல்ல வேலுச்சாமியை அவர் தோற்கடித்தார்.
இதேபோல, பன்னீர் செல்வம் வீடு உள்ள வார்டிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.
இந்த முடிவுகளைப் பார்த்தால், பொம்மை முதல்வராக பன்னீர் செல்வம் நீடிப்பதை பெரியகுளம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications