தேர்தல் வன்முறையில் போலீசார் உடந்தையா? - டி.ஜி.பி. மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் வன்முறையில் அதிமுகவினருக்கு போலீசார் உடந்தையாக இருந்தனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. நெய்ல்வால் கூறினார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடந்த 940 இடங்களில், ஓரிரு இடங்களித் தவிர அனைத்து இடங்களிலும்அமைதியாகத்தான் நடந்தது.

தேர்தல் நேரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்திருந்தபோதும், அவர்களதுபாதுகாப்கைப் கவனித்ததோடு, தேர்தல் பணிகளையும் போலீசார் நன்றாகக் கவனித்து வந்தனர்.

தஞ்சாவூரில் திருக்காட்டுப் பள்ளி சிவசாமி அய்யர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கைநடைபெறும்போது, கலவர கும்பலைக் கலைக்க தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. மன்னார்குடியில் அரசுக் கலைக் கல்லூரியிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் அடையாறு மத்திய பாலிடெக்னிக் திமுகவினர் உள்ளே நுழைந்து கலாட்டா செய்துள்ளனர். மேலும்தேர்தல் அதிகாரி ஒருவரையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடிவாக்கு எண்ணிக்கையின் போது பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.

இதில் அதிமுகவினர் அராஜகம் செய்தனர் என்றும், அதற்கு போலீசார் உடந்தையாக இருந்தனர் என்றும் கூறுவதைஏற்க முடியாது.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக ஸ்டாலின் தரப்பில் என்னிடம் மனு கொடுத்துள்ளார்கள். அதைநான் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பனுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இதில் முடிவு எடுத்து அனுமதி அளிக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது. அது பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+