வாக்கு எண்ணிக்கையில் வன்முறை - தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைச் சம்பவங்கள் நடந்தது தொடர்பாகசென்னை மேயர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள புகார் மனுவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும்என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடந்த இடங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பதால், நேற்று (திங்கள்கிழமை)அதிகாலை 1 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணப்பட்ட வார்டுகளில் மறு வாக்குப் பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்என்று திமுக வழக்கறிஞர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஜெகதீசனிடம் முறையிட்டனர்.
ஆனால் முறைப்படி மனு தாக்கல் செய்தால், அதை அவசர வழக்காக வீட்டிலேயே விசாரிப்பதாக நீதிபதி ஜெகதீசன்அனுமதியளித்தார். நேற்று உயர் நீதிமன்றம் விடுமுறை என்பதாலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதையடுத்து, ஸ்டாலின் தரப்பில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற விதிமுறைப்படி அரசு பிளீடர்ஆர். ரகுபதி, சிறப்பு அரசு பிளீடர் பி. குணராஜ் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஸ்டாலினின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக், கிண்டி பொறியியல் கல்லூரி,நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி ஆகிய வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் அதிமுகவினர் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டனர்.
மேலும், 22ம் தேதி அதிகாலை 1 மணிக்கு 100 பேருடன் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்திற்கு வந்த அதிமுகவேட்பாளர் பாலகங்கா, தனக்குச் சாதகமாக தேர்தல் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும் என்று மிரட்டினார்.
அத்துடன் எனக்கு சாதகமான வாக்குகளை நிராகரிக்கவும் பாலகங்கா வற்புறுத்தினார். அப்போது அவருடையஆதரவாளர்கள் தாக்கியதில் பாட்சா என்பவர் காயமடைந்தார். அவர் உடனே கிண்டி பாலாஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
திமுகவின் ஏஜென்டாக இருந்த எம்.பியான குப்புசாமியை அதிகாலை 2 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கும்இடத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு உடனடியாக பேக்ஸ்அனுப்பப்பட்டது.
155வது வார்டில் போட்டியிட்ட அதிமுகவின் கராத்தே தியாகராஜன், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிண்டிபொறியியல் கல்லூரிக்கு வந்து திமுக ஏஜென்டுகளைப் பிடித்துக் கீழே தள்ளினார். மேலும் எனக்குச் சாதகமானவாக்குகளைச் செல்லாதது என்று கூறி நிராகரிக்கச் சொல்லி தேர்தல் அதிகாரிகளை வற்புறுத்தினார்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏவான சேகர்பாபுவும் லயோலா கல்லூரிக்குச் சென்று வாக்கு எண்ணிக்கையின்போதுதகராறில் ஈடுபட்டார். அங்கும் எனக்குச் சாதகமான ஓட்டுக்களை நிராகரிக்க மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
எனவே இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 22ம் தேதி அதிகாலை 1 மணிக்குப் பிறகு எந்தெந்த வார்டுகளுக்குவாக்குகள் எண்ணப்பட்டதோ அங்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
நீதிபதி ஜெகதீசன் வீட்டிலேயே இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர்துரைசாமியும் அரசு தரப்பில் ரகுபதியும் குணராஜும் வாதாடினர்.
இதன் பின்னர் நீதிபதி ஜெகதீசன் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் கமிஷனுக்கு தார்மீக கடமை உள்ளது. எனவே, மனுதாரரின் தரப்பில் சமர்ப்பித்த கோரிக்கை மனுவைசட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து பைசல் செய்ய வேண்டும்.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டிருந்தால், அந்தப் புகார் மனுவையும் தேர்தல்கமிஷன் விரைவில் பைசல் செய்ய வேண்டும்.
மேலும், தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஏஜென்டுகளையும் வாக்கு எண்ணும் இடத்தில் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. இதுகுறித்த நடவடிக்கைகளையும் தேர்தல்கமிஷன் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஜெகதீசன் அத்தீர்ப்பில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications