3வது அணிக்கு வித்திடப்பட்டுள்ளது: சிதம்பரம்
சென்னை:
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகத்தில் 3வது அணிக்கு வித்திடப்பட்டுள்ளது என்றுகாங்கிரஸ் ஜனநாயக பேரவை தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் ஜனநாயக பேரவைக்கு சில இடங்களில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்குஎன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மக்களின் கவனத்தில் இருந்துள்ளது. காங்கிரஸ் அணி வானத்தில் ஒருமூலையில் புள்ளியாக மட்டுமே காணப்படுகிறது.
தேர்தலில் எங்கள் அணிக்கு அதிக வெற்றிகள் கிடைக்கவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. ஆனாலும் அதே சமயம்இரண்டு விஷயங்கள் ஆறுதளிக்கின்றன.
ஆளும் கட்சி தவறு செய்யும் போது தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சி பலவீனமடைந்து விட்டது என்ற பயம்சட்டசபை தேர்தலுக்கு பின் மக்கள் மனதில் இருந்து வந்தது.
ஆனால் உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் பெற்றுள்ள வெற்றி எதிர்கட்சி குறித்து மக்கள் மனதில் இருந்து வந்த குறைந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
3வது அணி தேவை என்று மக்கள் எப்போது யோசிக்க தொடங்கினார்கள் என்ற கேள்விக்கான விடையும்தற்போது கிடைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிகமான அளவில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளது பெரும்மகிழ்ச்சியை அளிக்கிறது.
காங்கிரஸ் ஜனநாயக பேரவைச் சேர்ந்த நாங்கள் மாற மாட்டோம். நாங்கள் நாங்களாகத்தான் இருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் நாங்கள் எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லாத தூய்மையானவேட்பாளர்களை அறிமுகப்படுத்தியதற்காக பெருமைப்படுகிறோம்.
உள்ளாட்சி தேர்தலின் போது காங்கிரஸ் அணியில் இடம் பெற்றிருந்த அனைவரும் பொறுமையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு உதவும் என்பதை உணர்ந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ்ஜனநாயக பேரவை கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications