ஆந்த்ராக்ஸ் ஜோக்: இந்தியர் மீது அமெரிக்காவில் வழக்கு
நியூயார்க்:
ஒசாமா பின் லேடனின் கூட்டாளியின் படம் அச்சிடப்பட்ட ஒரு வெற்றுக் கவரின் மேல் ஆந்த்ராக்ஸ் இருப்பதாகஎழுதி வைத்து தனது நிறுவனத்தின் மேலாளர்களிடம் விளையாட்டு காட்டிய ஒரு இந்தியர் மற்றும் அமெரிக்கர்ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு கார்பெட் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் பரத் தேவாசிங். இதேநிறுவனத்தில் பணிபுரியும் அமெரிக்கர் எவ்லின் டெய்லர். இவர்கள் 2 பேரும் தாங்கள் வேலை பார்க்கும்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் விளையாட்டிற்காக ஆந்த்ராக்ஸ் பற்றி ஒரு காரியம் செய்தனர்.
ஒரு வெற்றுக் கவரின் மீது இதில் ஆந்த்ராக்ஸ் உள்ளது என்று டெய்லர் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தைகொணடுபோய் அதிகாரியொருவரின மேஜையின் மேல் பரத் வைத்தார்.
அந்தக் கடிதத்தில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் கூட்டாளி ஒருவனின் படம் அச்சிடப்பட்டிருந்தது.இதைப் பார்த்தவுடன் அலுவலகத்தில் இருந்தவர்கள் அனைவரும், தலை தெறிக்க ஓடினர்.
பிறகு அது போலியான கடிதம் என்பது தெரிந்தும், அதிகாரிகளின் கோபம் குறையவில்லை. இதுகுறித்துமன்ஹாட்டன் கோர்ட்டில் பரத் மற்றும் டெய்லர் மீது புகார் கூறினர்.
இதையடுத்து இவர்கள் 2 பேர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை கூடவழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications