கொழும்பில் புலிகள் மனித வெடிகுண்டுக்கு 3 பேர் பலி
கொழும்பு:
கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மனித வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 1போலீஸ்கராரும் 2 பொது மக்களும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். குழந்தைகள் உள்பட 15 பேர்படுகாயமடைந்தனர்.
இலங்கையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தலைநகர் கொழும்பு இத் தாக்குதல் நடந்துள்ளது.
மனித வெடிகுண்டை அடையாளம் கண்டுவிட்ட போலீசார் அவரை தனியே அழைத்துச் செல்ல முயன்றனர்.அப்போது அந்த விடுதலைப் புலி தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் 1 போலீஸ்காரர் உள்பட 3 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். அந்த புலியின் உடலும் தூள்தூளானது.
அப்போது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் அங்கு வந்தது. குண்டுச் சிதறல்கள் வேனையும்தாக்கின. இதில் பல குழந்தைகளும் காயமடைந்தனர். இந்தக் குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 5 போலீசாரும் அடங்குவர்.
சம்பவம் நடந்த இடம் மக்கள் வசிக்கும் ஜனசந்தடி மிக்க பகுதி. குண்டுச் சிதறல்கள் அங்கிருந்த அடுக்கு மாடிக்குடியிருப்பையும் உலுக்கியது. அந்த குடியிருப்பின் பல இடங்களில் இறந்த புலியின் சதையும் ரத்தமும் சிதறிக்கிடக்கிறது.
இலங்கையில் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த மனித வெடிகுண்டு பிரதமர் விக்ரமநாயகேயைக் கொல்வதற்காகவே அங்கு வந்திருக்க வேண்டும் எனராணுவம் கருதுகிறது. 1999ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் அதிபர் சந்திகா குமாரதுங்காவின்பொதுக் கூட்டத்தில் மனித வெடிகுண்டு வெடித்து சந்திகாரிவின் கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications