துணை மேயர் தேர்தலில் மேயரும் வாக்களிக்கலாம் - தேர்தல் கமிஷனர்
சென்னை:
துணை மேயர் தேர்தலில் மேயரும் வாக்களிக்கலாம் என்று தமிழக தேர்தல் கமிஷனர் பி.எஸ். பாண்டியன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
துணை மேயரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மேயர் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருடைய மனதில்இருந்து வந்தது. நிச்சயமாக அவரும் வாக்களிக்க முடியும்.
கடந்த 25ம் தேதி பதவி ஏற்காத கவுன்சிலர்களும் துணை மேயர், துணைத் தலைவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்.
6 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கான துணைத் தலைவர்களைத்தேர்ந்தெடுக்கும் தேர்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்றவராகஅறிவிக்கப்படுவார். முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் சம வாக்குகள் பெற்றிருந்தால், குலுக்கல் முறையில்யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும். அப்படிபாதிக்கு மேற்பட்டவர்கள் வராவிட்டால், 30 நிமிடங்கள் காத்திருந்த பிறகு தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரமும்தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்றார் பாண்டியன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications