ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனை சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை)சந்தித்துப் பேசினார்.
சென்னை மாநகர மேயராக இரண்டாவது முறையாக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மரியாதை நிமித்தமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஸ்டாலினும், மதுரை மேயர் செ.ராமச்சந்திரனும் சந்தித்துப் பேசினார்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை ஆளுநர் ரங்கராஜனை ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த இந்தச்சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று பின்னர் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications