சென்னையில் கல்லூரி மாணவர்கள் திடீர் ரகளை
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென செய்த ரகளையால் பஸ்சின் கண்ணாடிகள் உடைத்துநொறுக்கப்பட்டன. பஸ் டிரைவரும் தாக்கப்பட்டார்.
சென்னை அண்ணா சதுக்கம் அருகே கல்லூரி மாணவர்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டனர். அந்த வழியாகச்சென்று கொண்டிருந்த பஸ்களின் மீது கல்லை எறிந்து கண்ணாடிகளை உடைத்தனர்.
இச்சம்பவத்தில் 25ஜி என்ற பஸ்ஸின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அந்த பஸ்சின் டிரைவரும் கடுமையாகத்தாக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:
அண்ணா சதுக்கம் அருகே 3 மாணவர்கள் திடீரென்று பஸ்சில் ஏறினர். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும்அவர்கள் இறக்கிவிட்டனர். அதே சமயம் வேறு சில மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
நாங்கள் என்ன நடக்கிறது என உணரும் முன்னரே பெரிய பெரிய கற்களை பஸ் மீது எறிய ஆரம்பித்தனர். தடுக்கமுயன்ற என்னையும் பயங்கரமாகத் தாக்கினர்.
சில மாணவர்கள் பொது மக்களையும் தாக்க முற்பட்டனர். அவர்கள் எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை என்றார் அந்த டிரைவர்.
வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் எந்த கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவில்லை. இந்தச் சம்பவம்காரணமாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications