சென்னையில் ஆந்திர பெண்களை வைத்து விபச்சாரம் செய்த கேரள நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலையாளத் திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் ஒரு துணை நடிகர் சென்னையில் பெண்களைவைத்து விபச்சாரம் செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

மலையாள துணை நடிகர் சிபி சக்கரவர்த்தி. இவரது உதவியாளர் சிபி. இருவரும் சேர்ந்து சென்னைநுங்கம்பாக்கத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த 9 பெண்களை அவர்கள் கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தங்களை டிவியில் நடிக்க வைக்க சிபி சக்கரவர்த்தி அழைத்து வந்ததாகவும், ஆனால் விபச்சாரத்தில் ஈடுபடுத்திஉள்ளதாகவும் அந்தப் பெண்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். 15 நாள் கால்ஷீட் என்ற பெயரில் அவர்களைகூட்டி வந்த சிபி சக்கரவர்த்தி இதற்காக ரூ.6,000 சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார்.

சிபியை போலீஸார் கைது செய்து விட்டனர். ஆனால் சிபிசக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார்தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+