சரணடைந்தார் ரவுடி வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை-அயோத்திக் குப்பம் "தாதா" வீரமணி நேற்று (திங்கள்கிழமை) மாலை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில்சரணடைந்தார். அவருடைய நான்கு கூட்டாளிகள் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரவுடி சண்முகத்தை கடத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்ற வீரமணிதலைமையிலான கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய வீரமணியின் கூட்டாளிகளான செந்தில் (36), செல்லப்பன்(32), வெங்கட்ராமன் (28) மற்றும் சரவணன் (26) ஆகிய நான்கு பேர் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு பாண்டிச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமலதாடேனியல் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாண்டிச்சேரியில்தான் வீரமணியும் இருப்பார் என்று கருதிய போலீசார் அங்கு தீவிரமாகஅவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் வீரமணி திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தார். இவருடன்தமிழ்முரசு என்பவரும் சரணடைந்தார்.

இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி சூளமணி உத்தரவிட்டார்.

இதற்கிடையே மாமல்லபுரம் கடற்கரையில் அதிமுக கலர் பார்டர் கொண்ட ஒரு இயந்திரப் படகு திங்கள்கிழமைமாலை கரை ஒதுங்கியது. அந்த படகு வீரமணிக்குச் சொந்தமானதாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தப் படகு குறித்து மாமல்லபுரம் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. தற்போது படகு போலீஸார் வசம்உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+