பாக். எல்லைப் பாதுகாப்புக்கு அமெரிக்கா நிதியுதவி
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தான் அருகே உள்ள எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு 73 மில்லியன்டாலர்களை அமெரிக்கா வழங்கவிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை எதிர்த்து அமெரிக்கா நடத்திவரும் போருக்கு, பாகிஸ்தான் ஒத்துழைப்புஅளித்து வருகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் அருகே உள்ள எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகபாகிஸ்தானுக்கு 73 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த உதவியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள், தரைவழி வாகனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், இரவில்பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், மற்றும் அதற்கான பயிற்சிகள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆப்கானில் இருந்து தலிபான்கள், மற்றும் அமெரிக்க எதிர்ப்புப் படையினர் எல்லையைக் கடந்துபாகிஸ்தானுக்குள் நுழைவதாகப் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் விண்டிசெம்பர்லின் கூறுகையில்,
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். உண்மையில்அவர் அதற்காகப் பாடுபடுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும்இடையில் உள்ள எல்லை பெரியதாக இருப்பதால் அதை கட்டுக்குள் கொண்டுவருவது சற்று சிரமமான காரியம்தான்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் மதவாதக் குழுக்களின் கிளர்ச்சிகளை அடக்காமல், ஆப்கானிஸ்தானில்தீவிரவாதிகளை வெல்ல முடியாது என்பதை முஷாரப் நன்றாக உணர்ந்துள்ளார்.
இதுபோன்ற மதவாதக் குழுக்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கதற்போது அமெரிக்காவில் இருந்து ஒரு குழு வருகிறது.
முஷாரப்பைப் பொறுத்தவரை பாகிஸ்தானை, தீவிரவாதத்தாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட நாடாகத்தான்பார்க்கிறார். அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதில் அவர் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் என்றார்செம்பர்லின்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications