வருகிறது மின்வாரிய ஊழியர் போராட்டம்
சென்னை:
20 சதவீத போனஸ் வழங்கக் கோரி தமிழக மின் வாரிய ஊழியர்களும் பஞ்சாலைத் தொழிலாளர்களும் வரும்திங்கள்கிழமை முதல் காலவரைற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
மின் வாரியத் தொழிலாளர்கள் 20 சதவீத போனஸ் கோரி வருகின்றனர். ஆனால், போக்குவரத்து ஊழியர்களுக்குஅறிவிக்கப்பட்டது மாதிரி 8.33 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மின் வாரியத் தொழிலாளர்களின் 10 சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழக மின்துறைச்செயலாளருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து இன்று மாலை அரசுக்கு தங்கள் கோரிக்கையை எழுத்துப் பூர்வமாக அளிக்கப் போவதாகவும், 24மணி நேர கெடுவும் வழங்கப் போவதாகவும் மின் வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் திங்கள்கிழமை காலை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறியுள்ளனர்.
பஞ்சாலைத் தொழிலாளர்கள்:
அதே போல பஞ்சாலைத் தொழிலாளர்களும் 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை முதல்காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோயம்புத்தூரிலும் ஈரோட்டிலும் தான் பெரும்பாலான பஞ்சாலைகள் உள்ளன. இதில் இதுவரை 18ஆலைகளில் மட்டும் தான் போனஸ் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.
மத்திய அரசுக்குச் சொந்தமான என்.டி.சி. மற்றும் தனியார் ஆலைகளில் போனஸ் பேச்சுவார்த்தை இன்னும்முடிவடையவில்லை. உடன்பாடு எட்டப்படாததால் போனஸ் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தீபாவளிக்கு வெறும் 3 நாட்கள் தான் உள்ள நிலையில் உடனடியாக போனஸ் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால்திங்கள்கிழமை காலை 7 மணி முதல் காலவைரயற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என கூட்டுப்போராட்டக் குழு அறிவித்துள்ளது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications