இலங்கைக் கடற்படை சுட்டு தமிழக மீனவர் பலி
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர்இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டார். 10க்கும் மேற்பட்ட மீனவர்கள்படுகாயம் அடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதரண்யம் கடலில் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர்,தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் முத்துவேல் என்ற மீனவர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவருடன் சென்ற 10 மீனவர்கள் குண்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும்தற்போது தஞ்சை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்து சில மணிநேரங்களில் அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு மீனவக்கும்பலையும் இலங்கைகக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். அவர்களை தடி மற்றும் துப்பாக்கிகளில் தாக்கிக்காயப்படுத்தியுள்ளனர்.
இதில் செல்வமனி என்ற மீனவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிலமீனவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இலங்கைக் கடற்படையினரால் நடத்தப்பட்டுள்ள இந்தத்தாக்குதல்கள் அந்தப் பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications