பஞ்சாலை ஊழியர்கள் ஸ்டிரைக் ஒருநாள் ஒத்திவைப்பு
கோயம்புத்தூர்:
போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஓரளவு சுமூகமான தீர்வு கிடைத்திருப்பதையடுத்து, பஞ்சாலைஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒருநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 450 பஞ்சாலைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 150 பஞ்சாலைகளில் போனஸ் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.
இதேபோல மற்ற பஞ்சாலைகளிலும் நல்ல உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக பஞ்சாலைத் தொழிற்சங்கக்கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் என். ஆறுமுகம் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மாலையில் நடைபெறவிருக்கும்கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications