வீண் பிடிவாதத்தை கைவிட அரசுக்கு பஸ் ஊழியர்கள் கோரிக்கை
சென்னை:
தமிழக அரசு தன்னுடைய வீண் பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டு, சென்ற ஆண்டு கொடுத்த போனசையேஇப்போதும் தருவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் ஆர். செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால், தமிழகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
போராட்டத்தைக் கைவிட்டு அரசு போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றுபோக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், தமிழக அரசு தன்னுடைய வீண் பிடிவாதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று போராட்டம்நடத்துபவர்கள் பதிலுக்குப் பாய்ந்துள்ளனர்.
சென்ற ஆண்டு கொடுத்ததைப் போலவே 20 சதவிகித போனசைக் கொடுக்கும் வரை தொடர்ந்து நாங்கள்போராடுவோம் என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் செயலாளர் செளந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications