தலிபான்கள் பிடியிலிருந்து 8 கிறிஸ்தவ போதகர்கள் விடுதலை
வாஷிங்டன்:
கிறிஸ்தவ மதத்தைப் போதித்த குற்றத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்களால் கைது செய்யப்பட்ட 8 பேர்விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது திடீரென அந்த 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கைள் அனைவரும்தற்போது பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று லிபிய அதிபர் மோமர் கடாமியின் மகன் செய்ப்-இல்-இஸ்லாம்கடாபி முன்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றுகூறப்படுகிறது.
இவர்களின் விடுதலை குறித்து செய்ப்-இல்-இஸ்லாம் கடாபி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களிடம்கூறுகையில்,
கடாபி பவுண்டேஷன் என்ற எங்கள் தன்னார்வ நிறுவனத்தின் மூலம் நான் கடந்த 2 மாதங்களாக தலிபான்ஆட்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். அப்போது அவர்களிடம் கைது செய்யப்பட்டிருந்த 8 கிறிஸ்தவமத போதகர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவந்தேன். அவர்கள் விரைவில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று முன்பே கூறியிருந்தார்.
அதன்படி தற்போது அவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச அமைதிக்குழு:
ஆப்கானில் அமைதியை நிலைநாட்டு பல நாட்டு படைகள் அடங்கிய கூட்டுப் படையை, குறிப்பாக துருக்கி,பங்களாதேஷ், இந்தோனேஷியா ஆகிய இஸ்லாமிய நாடுகளின் படைகளை, அனுப்ப ஐக்கிய நாடுகள் சபிையில்அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்தக் கூட்டுப் படையில் தங்கள் நாட்டு வீரர்களையும் சேர்க்க வேண்டும்என்று சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
இதுகுறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஐ.நா.சபைத் தலைவர் கோபி அன்னானுடனும், அமெரிக்கஅதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
முக்கியமாக ஆப்கானில் நார்தர்ன் அலையன்ஸ் படையினர் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்கள் படைகளைநிறுத்த அனுமதிக்க வேண்டும் என இந்த 2 நாடுகளும் கோருகின்றன.
ஆனால், இந்த இரு நாடுகளும் தான் தலிபான்களுக்கு ஆதரவு கொடுத்து ஆப்கானிஸ்தானையே நாசப்படுத்தினஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications