ஆப்கானில் இருந்து ஓடி வந்த பாகிஸ்தான் வீரர்கள்
இஸ்லாமாபாத்:
தலிபான்களுடன் சேர்ந்து அமெரிக்காவை எதிர்த்துப் போராட ஆப்கானிஸ்தானுக்குள் சென்ற 500பாகிஸ்தானியர்கள், நார்த்தர்ன் அலையன்ஸ் படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் உடல்களை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக ஏற்காது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துவிட்டது.
மேலும் 4,000 பாகிஸ்தானியர்கள் அங்கிருந்து உயிருக்கு அஞ்சி திரும்பி ஓடி வந்துள்ளனர்.
இவர்கள் மஷார்-ஏ-ஷெரீப் நகரைக் காக்க தலிபான்களுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், நார்த்தர்ன்அலையன்ஸ் நடத்திய தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் தலிபான்களே ஓடிவந்துவிட்ட நிலையில்அவர்களின் பின்னாலேயே பாகிஸ்தானியர்களும் ஓடி வந்துவிட்டனர்.
இக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் சிக்கி கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்குள் சென்ற இந்தக் கும்பல் புஷ்தூன் இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகளின் படை என்பதுகுறிப்பிடத்தக்கது. தலிபான்களும் புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
திரும்பி வந்த இவர்கள் கூறுகையில், தலிபான்களுக்கு தோல்வி ஏற்படுகிறது என்ற செய்தி வெளியான உடனேயேஆப்கானிஸ்தான் மக்களின் நடவடிக்கைளில் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. சிறிய சிறிய குழுவினர் கூடதலிபான்களுக்கு எதிராக தாக்க ஆரம்பித்துவிட்டனர்.
தலிபான்களுக்கு உதவிய எங்களுக்கும் அடி விழுந்தது. எங்களின் ஆயுதங்களையும் பணத்தையும் பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர் என்றனர்.
இதற்கிடையே பாகிஸ்தானின் நடவடிக்கைகளும் ரொம்பவே மாறிவிட்டன. தலிபான்களுக்கு ஆயுதமும் கொடுத்துபோர் பயிற்சியும் தந்த பாகிஸ்தான் இப்போது தலிபான்களின் தோல்வியை வரவேற்பதாக அறிவித்துள்ளது.
தலிபான்களுடன் சென்று போரிடச் சென்ற பாகிஸ்தானியர்கள் முறைகேடாகத் தான் ஆப்கானிஸ்தானுக்குள்சென்றனர். இப்போது திரும்பி வருபவர்களும் அதே வழியில் தான் மீண்டும் உள்ளே வர வேண்டும்.இறந்தவர்களின் உடல்களைப் பெற மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
2 வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 22 ஹர்கத்-உல்-முஜாகிதீன்காஷ்மீர் தீவிரவாதிகளின் உடல்களைப் பெறவும் பாகிஸ்தான் மறுத்துவிட்டது நினைவுகூறத்தக்கது.
இவர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியதே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications