ராமநாதபுரம்: இரு பஸ்கள் மோதிக் கவிழ்ந்ததில் பள்ளி மாணவன் பலி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து ஒன்று எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதிக் கவிழ்ந்ததில் ஒரு பள்ளிமாணவர் பலியானான். மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர்.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த அரசுப் பேருந்தை ஓட்டியதுஅரசால் நியமிக்கப்பட்ட தாற்காலிக டிரைவரா அல்லது அதிமுக ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவராஎன்று தெரியவில்லை.

ராமநாதபுரத்திலிருந்து வடநாடு என்ற கிராமத்திற்கு இன்று காலை இந்த அரசுப் பேருந்த சென்றுகொண்டிருந்தது.அந்தப் பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் எதிரே வந்த தனியார் பேருந்துடன் மோதியது.

மோதிய வேகத்தில் அருகில் முழங்கால் அளவு தேங்கிக்கிடந்த தண்ணீருக்குள் இறங்கிக் கவிழ்ந்துவிட்டது. இந்தவிபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஜீவானந்தம் என்ற பள்ளி மாணவர் பலியானார். மேலும் 24 பேர்படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தாற்காலிக டிரைவர்களால் இயக்கப்பட்டு வரும் பஸ்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகிஉயிர்களைப் பறித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+